1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayalalitha sent letter to vidhyasagar Rao

அப்போலோவில் இருந்து ஆளுநருக்கு ஜெ. எழுதிய கடிதம்?

Jayalalitha
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாள் ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதம் வெளியாகியுள்ளது.


 

 
கடந்த வருடம் செப்.22ம் தேதி இரவு மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல், டிசம்பர் 5ம் தேதி அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது முதல் அனைத்திலும் மர்மமே நீடிக்கிறது. 
 
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அடுத்த நாள், அதாவது செப்.23ம் தேதி, தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார்.  அதாவது, தன்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்ததற்கு ஆளுநருக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பெஸ்ட் விஷ்ஷஸ் (வாழ்த்துக்கள்) என அவர் குறிப்பிட்டுள்ளார்.


 

 
தன்னுடைய ஓராண்டு பணிக்காலம் குறித்து எழுதியுள்ள புத்தகத்தில் வித்யாசாகர் இதை  குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் ஜெ.வின் கையொப்பம் இருக்கிறது. 
 
கடந்த செப்.28ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், செப்.22 இரவு அவர் சுயநினைவின்றியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என செய்தி வெளியிட்டிருந்தது. அப்படியிருக்க, கையெழுத்திட்டு ஜெ. எப்படி ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
நிலவேம்பு குடிநீரை கொடுக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை