புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (16:05 IST)

தீவிரமடையும் கொரொனா....கூடுதல் கட்டுப்பாடுகள்

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

தமிழகத்தில் கொரொனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால், கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில்,  காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே உணவகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தைகளில் 50% கடைகள் சுழற்சி முறையில் இயங்கலாம் – வாரச்சந்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் வருவோர் இரண்டு தவணை ஊசி செலுத்தி இருக்க வேண்டும், திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் சுமார் 50 பேர் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

 மேலும், சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் நகைக்கடைகள், துணிக்கடைகள், பூங்காக்கள், மால்கள் இயக்கத் தடை விதிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சிய சமீரன் உத்தரவிட்டுள்ளார்.