1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Indian team unveiled for T-20 World Cup

’டி -20’ உலகக் கோப்பைக்காக முன்னாள் வீரர் வெளியிட்ட இந்திய அணி !

உலக கோப்பை
நடைபெறவுள்ள டி- 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் 15 பேருக்கு இடம் உண்டு என முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமணன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில், டி-20 உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதற்காக  கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றும்  தங்கள் தரப்பில் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட உள்ளது.
 
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமணன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதுடன் அவர் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
 
அதில், விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஷ் அய்யர், ரிஷப் பாண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா, சாஹல்,யாதவ், மணிஷ் பண்டே, ஷிவம் டுபே, ஜடேஜா, முகமது ஷமி,, தீபக் சாஹர் , புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
தூத்துக்குடியில் 144 உத்தரவு..