புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 7 ஜனவரி 2020 (18:15 IST)

நியூசிலாந்து கிரிக்கெட் விளையாடுவது எளிதல்ல - ரோஹித் சர்மா

கிரிக்கெட்டில் உலக அளவில் இந்திய அணி வீரர்கள் சிறந்து விளங்கிவருகின்றனர். ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய அணி பெற்றிருந்த புகழை தற்போது இந்திய வீரர்களின் திறமைக்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து ஏற்ற இடம் கிடையாது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி தற்போது, இலங்கை அணிக்கு எதிராக டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
 
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
 
இந்த தொடரை அடுத்து, நியூசிலாந்து சென்று, அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் மற்றும்  ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
 
இந்நிலையில், இந்திய வீரர் ரோஹித் சர்மா இதுகுறித்து கூறியதாவது :
 
நியூசிலாந்தில் உள்ள ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அணியில், டிரெண்ட் ஓல்ட், டிம் சவுத்தி, மேட் ஹென்றி போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களை எதிர்த்து விளையாடுவது எளிதானது இல்லை;  அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்கள் மாறுவது கடினமாக ஒன்று என தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே, இந்திய அணி நியூசிலாந்தில் நடைபெற்ற தொடரில் 0-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.