திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (08:32 IST)

நியூசிலாந்தில் விளையாடுவது அவ்வளவு சுலபமல்ல – ரோகித் ஷர்மா!

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கும் நிலையில் அது சாதாரண விஷயம் கிடையாது என ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையேயான டி20 போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதற்கு பிறகு ஜனவரி 24ம் தேதி முதல் நியூஸிலாந்து செல்லும் இந்திய அணி அங்கு டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை விளையாட இருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா ”நியூஸிலாந்து மண்ணில் விளையாடுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. கடந்த முறை அங்கு சென்று விளையாடுயபோது 0-1 கணக்கில் தொடரை இழந்தோம். ஆனால் இப்போது சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு உலக கோப்பையில் அரையிறுதியில் மோதி கொண்ட பிறகு இந்தியா – நியூஸிலாந்து இடையே நடக்கும் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.