1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 144 for Tuticorin

தூத்துக்குடியில் 144 உத்தரவு..

தூத்துக்குடி
பசுபதி பாண்டியன் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படும் நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் நினைவு நாள் நாளை (ஜனவரி 10) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அசம்பாவிதம் நடப்பதை தடுக்க இன்று மாலை 6 மணி முதல் 11 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 க்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்களில் மக்களை ஏற்றி வருவதற்கும், அன்னதான வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
’டி -20’ உலகக் கோப்பைக்காக முன்னாள் வீரர் வெளியிட்ட இந்திய அணி !