1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Indian meteorological center warns about rain

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிகனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கடலோரம்
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை உள்பட தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம் 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் அதன்பிறகு படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
அடுத்த கட்டுரையில்
வேளாங்கண்ணியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு