வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (07:26 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது என்பதும் இதனால் பல சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது
 
இதன்படி ஆகிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் இன்று பொதுமக்கள் ஜாக்கிரதையாக தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.