1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Stalin inspection about rain

சென்னையில் கனமழை: நள்ளிரவில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை
சென்னையில் கனமழை: நள்ளிரவில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் நேற்று இரவு திடீரென பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது என்பதும் தலைமைச்செயலகத்தில் தண்ணீர் புகுந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் நேற்று பெய்த எதிர்பாராத கன மழையை அடுத்து சென்னையில் உள்ள மழை சேதங்கள் குறித்து நள்ளிரவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்தார்.
 
நேற்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருச்சி சென்றிருந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை திரும்பியதும் உடனடியாக ஓய்வெடுக்காமல் மழை குறித்து ஆய்வு செய்தார் 
 
எதிர்பாராத பெய்த மழையால் தேங்கிய நீரை உடனே அகற்றும் பணிகளை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து விடிய விடிய தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றம்