வங்கி மோசடிகளை தடுக்க ஏர்டெல் அதிரடி: புதிய 'Fraud Alert' AI அறிமுகம்!
இணையவழி வங்கி பண பரிவர்த்தனைகளில் ஓடிபி மூலம் நடைபெறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க, ஏர்டெல் நிறுவனம் 'Fraud Alert' என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் ஒருவருடன் போனில் பேசிக் கொண்டிருக்கும்போது, உங்கள் மொபைலுக்கு ரகசிய ஓடிபி எண் வந்தால், இந்த ஏஐ தொழில்நுட்பம் உடனடியாக உங்களை எச்சரிக்கும். டெலிவரி அல்லது வங்கிச்சேவை என்ற பெயரில் மோசடி நபர்கள் உங்களை ஏமாற்றி ஓடிபியை பெறுவதை இது முன்கூட்டியே தடுத்துவிடும்.
பயனர்களின் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ஏர்டெல் எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிக்க இத்தகைய தொழில்நுட்ப வசதிகள் மிகவும் அவசியம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
Edited by Siva