1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. India omicron cases cross to reach thousand

2 ஆயிரத்தை நெருங்கியது ஒமிக்ரான் பாதிப்பு – மாநிலவாரி நிலவரம்!

India
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறி வருவதாக கூறப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 1,892 ஆக பதிவாகியுள்ளன. இதில் 766 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில அளவிலான ஒமிக்ரான் பாதிப்பில் 568 பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. டெல்லியில் 382 பாதிப்புகளும், தமிழகத்தில் இதுவரை 121 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
விசாரணைக்கு வரும் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு!