மெட்ரோ நகரங்களில் பரவுவதில் 75% ஒமிக்ரான்..? – அதிர்ச்சி தகவல்!!
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் முக்கிய நகரங்களில் பெரும்பாலும் ஒமிக்ரான் வைரஸே பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது டெல்டா மற்றும் ஒமிக்ரான் இரண்டு வகை தொற்றும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் இந்திய அளவில் மொத்த கொரோனா பாதிப்புகளில் ஒமிக்ரான் 12% ஆக இருந்த நிலையில் தற்போது 28% ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நோய்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.கே.அரோரா பேசும்போது “பெரிய மெட்ரோ நகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் தான் 75% அளவுக்கு ஓமைக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் மூன்றாவது அலை ஒமிக்ரானால்தான் ஏற்பட உள்ளது என்பதை காண முடிகிறது” என கூறியுள்ளார்.