விசாரணைக்கு வரும் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இப்போது தலைமறைவாகியுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் ஏற்பட்டதை அடுத்து அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக அவரை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. ஒரு வேளை அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கும் நிலையில் அவர் தலைமறைவில் இருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.