திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:04 IST)

இரு நாட்டு எல்லையில் பாலம் கட்டும் சீனா… செயற்கைக்கோள் புகைப்படம்!

இந்தியா மற்றும் சீனா எல்லையில் உள்ள ஏரி ஒன்றில் சீனா பாலம் கட்டி வருவது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் எல்லைப்பகுதியில் தங்கள் ராணுவத்தினரை குவித்து வருவதால் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்த சுப்ரமண்ய சுவாமியே குற்றம் சாட்டி வருகின்றார்.

இந்நிலையில் இந்தியாவில் பெரும்பகுதியைக் கொண்ட பாங்காங்க் என்ற ஏரியில் சீனா இப்போது பாலம் கட்டி வருவதாக செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கனவே எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கு தேவையான குடியிருப்புக் கட்டிடங்களைக் கட்டியது குறிப்பிடத்தக்கது.