1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Income tax raid in second day

2ஆவது நாளாக இன்றும் தொடரும் ஐடி ரெய்டு..வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதா?

தமிழகம்
சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று வருமானவரித்துறை சோதனை செய்து வந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்வதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் உள்பட தமிழகத்தில் உள்ள பல இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று முதல் சோதனை செய்து வருகின்றனர். 
 
குறிப்பாக சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் சோதனை நாளையும் தொடர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சோதனை முழுவதும் முடிந்த பின்னரே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கனமழை எதிரொலி.. ஒரே ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!