திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (16:50 IST)

வைட்டமின் - ஏ சத்து குறித்த விழிப்புணர்வு: வழிகாட்டு முறைகள் வெளியீடு -சுகாதாரத்துறை!

விட்டமின் ஏ சத்து குறித்த விழிப்புணர்வு வழிகாட்டு நெறிமுறைகளை இன்று தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மக்களுக்கு பலவேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தேர்ந்தெடுக்கப்பட்ட 30 கிராமங்களில் உள்ள வார்டுகளில் பிறந்து 6 முதல் 60 மாதம் வரையில் இருக்கும் 15 சிறுவர்கள் கள ஆய்வில் உட்படுத்த சுகாதாரசேவைகள் துணை துறை இயக்குனர்களுக்கு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இன்று முதல் 25 ஆம் தேதிக்குள் கள ஆய்வு நடத்தி அதன் விவரங்கள் 30 ஆம் தேதிக்குள் பொது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.