அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னாள் உதவியாளர் வீட்டில் சோதனை.. பெரும் பரபரப்பு..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் திடீரென வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மின்சார வாரியத்திற்கு ஒப்பந்தம் அளித்ததில் நடந்த முறையில் தொடர்பாக வருமானவரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி இல்லத்தில் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னை தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் தெருவில் உள்ள காசியின் வீட்டில் தற்போது வருமானத் துறை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது
இந்த சோதனைக்கு பின்னரே அவரது வீட்டில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva