சிந்தித்து 2024 தேர்தலை எதிர்கொள்ளுங்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் பெண் வேட்பாளர்களுக்கு 33 சதவீத தொகுதிகள் ரிசர்வ் செய்யப்படும் என கூறப்பட்டது. இதன் மீதான விவாதம் இன்று மக்களவையில் நடந்து வருகிறது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காலம் கடந்து செய்தாலும் கண்துடைப்புக்காக செய்தாலும் இப்போதைய பிரச்சனைகள் அனைத்தையும் திசைதிருப்பச் செய்தாலும், ஒன்றிய அரசு கொண்டு வரும் மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (Delimitation) உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.☝️
2024ல் பாஜக வெற்றி பெற்றால் நிரந்தரமாக ஆட்சியை தக்கவைக்க மறுவரையறை (Delimitation) செயல்படுத்துவார்கள்.
தற்போது நடக்கும் அநியாயங்களை விட 100 மடங்கு அதிகமாக தென்னிந்தியாவிலும் செய்வார்கள்.
ஜனநாயக ஆட்சியில் மக்களாட்சி குழி தோண்டி புதைக்கப்படும். சாதி, மத வெறியால் மக்கள் சாதாரணமாக கொல்லப்படுவார்கள்.
சிந்தித்து 2024 தேர்தலை எதிர்கொள்ளுங்கள்.என்று தெரிவித்துள்ளார்.