தொடர்புடைய செய்திகள்
- சென்னை ஐ.ஐ.டி.யில் இன்று ஒரே நாளில் 12 மாணவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
- சென்னை ஐஐடியில் கொரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
- சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா! – ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு!
- சென்னை ஐஐடியில் அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழப்பு! – ஆந்த்ராக்ஸ் நோய் காரணமா?
- இந்தியர்கள் உடலில் சர்க்கரை நோய் ஆபத்தை அதிகரிக்கும் ஜீன்: கண்டுபிடித்த சென்னை ஐஐடி!
IIT Chennai COVID Hotspot? மொத்தம் 55 பேருக்கு கொரோனா உறுதி!
சென்னை ஐஐடியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.
கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடியில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருகிறது என்றும் ஏற்கனவே படிப்படியாக அதிகரித்து 30 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 மாணவர்களுக்கு ஒரு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
இதுவரை சென்னையில் உள்ள 700 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பரிசோதனையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவர் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
