செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (14:51 IST)

சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா! – ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு!

சென்னையில் ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் கொரோனா வெகுவாக குறைந்த நிலையில் தற்போது தினசரி 31 என்ற அளவில் பாதிப்புகள் இருந்து வருகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது சில மாநிலங்களில் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக வெளியான செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மற்ற மாநிலங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னை ஐஐடியில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.