1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (10:44 IST)

சென்னை ஐஐடியில் கொரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Chennai IIT
சென்னை ஐஐடியில் 10 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார் 
 
சென்னை ஐஐடியில் ஏற்கனவே 3 மாணவர்களுக்கு கொரோனா  வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏழு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது
 
இதனை அடுத்து 10 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் சுப்பிரமணியன் சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று கூறியுள்ளார் 
 
இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது என்றும் அவர் தெரிவித்தார். வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்