1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. hyderabad municipality sealed jayalalitha home

ஜெயலலிதாவின் வீட்டுக்கு சீல்!.. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை..

jayalalitha
திரைப்பட நடிகையாக இருந்து தமிழக முதலமைச்சராக மாறியவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் அதிமுகவை துவங்கிய பின் அந்த கட்சியில் தன்னை ஜெயலலிதா இணைத்துக் கொண்டார். எம்ஜிஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து திமுகவுக்கு எதிராக அரசியல் செய்தார்.

தமிழ்நாட்டில் பெண்களின் வாக்குகளை அறுவடை செய்து பலமுறை வெற்றி பெற்று தமிழக முதல்வராக இருந்திருக்கிறார். பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை இவர் அறிவித்திருக்கிறார்.
ஆளுமை நிறைந்த ஒரு அரசியல் தலைவராக பார்க்கப்பட்டவர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 2016ஆம் வருடம் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். கடைசி வரை சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வசித்து வந்தார்.ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத் ஸ்ரீநகர் காலணியில் நான்கு மாடிகளுடன் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் இப்போது யாரும் வசிக்கவில்லை..

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் அந்த வீட்டுக்கு வரி கட்டவில்லை எனக்கூறி ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்திருக்கிறது. ரூ.82 லட்சம் வரி செலுத்த வேண்டும் என ஜெயலலிதாவின் உறவினருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் எந்த பதிலும் கொடுக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.. தமிழகத்தில் ‘அம்மா. அம்மா’ என வாய்க்கு வாய் சொல்லி அவரை வைத்து அரசியல் செய்யும் யாரும் இந்த பணத்தை கட்சி சார்பாக கூட கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
விஜய் ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்?.. நடிகர் சொன்ன ரகசியம்...