1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Huge traffic problem near chengalpat

புத்தாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்

புத்தாண்டு
புத்தாண்டு விடுமுறைக்காக தென் மாவட்டங்கள் சென்ற பொதுமக்கள் இன்று சென்னை திரும்பி கொண்டிருப்பதை அடுத்து கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால்  தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் சென்றனர் என்பதும் இதனை அடுத்து இன்று முதல் மீண்டும் வேலை நாள் தொடங்க இருப்பதை அடுத்து நேற்று இரவே சென்னை திரும்பி கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்ப மக்கள் காரணமாக செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாகவும் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிற்கிறது என்பதால் அங்கிருந்து  சென்னையில் உள்ள தங்களது இருப்பிடத்திற்கு வருவதற்கும் பொதுமக்கள் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
எல்.ஐ.சி.க்கு நோட்டீஸ் அனுப்பிய ஜிஎஸ்டி.. ரூ.806 கோடி கேட்டுள்ளதால் பரபரப்பு..!