நியூசிலாந்து நாட்டில் பிறந்தது புத்தாண்டு .. சீனாவிலும் சிறப்பான கொண்டாட்டம்..!
2024 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் ஒரு சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் சற்றுமுன் நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்ததை அடுத்து அந்நாட்டு மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
உலகில் முதன் முதலாக நியூசிலாந்து நாட்டில் தான் சூரிய உதயம் ஏற்படும் என்பதால் அங்குதான் தற்போது புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சீனாவில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்று உள்ளார் என்பதும் நடன நிகழ்ச்சிகளை அவர் கண்டு களித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இன்னும் ஏழு மணி நேரத்தில் இந்தியாவிலும் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட உள்ளது என்பதும் புத்தாண்டை வரவேற்க இந்திய மக்கள் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva