ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (12:49 IST)

சரிவுடன் தொடங்கும் புத்தாண்டு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

share
இன்றைய புத்தாண்டு தினத்தில் பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவுடன் இருப்பதை அடுத்த முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  
 
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் ஏதாவது ஒரு பங்குகளை வாங்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள். இதனால்  பங்குச்சந்தையும் புத்தாண்டு தினத்தில் ஏற்றம் கண்டிருப்பது வழக்கமாக இருந்தது. 
 
ஆனால் இன்றைய புத்தாண்டில் பங்குச்சந்தை இறக்கம் கண்டுள்ளது.  மும்பை பங்கு சந்தை 42 புள்ளிகள் சரிந்து 72,197 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை இரண்டு புள்ளிகள் சரிந்து 21 ஆயிரத்து 743  என்ற  புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
புத்தாண்டு தினத்தில் குறைந்த அளவே பங்குச்சந்தை சரி இருந்தாலும் அதிக அளவில் பொதுமக்கள் பங்குகளை வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 
Edited by Siva