தொடர்புடைய செய்திகள்
- உடைந்ததா கூட்டணி? தனித்து களமிறங்கிய பாஜக – அண்ணாமலை திடீர் அறிவிப்பு!
- அடுத்தடுத்து அதிமுக வேட்பாளர் பட்டியல்; கூட்டணி என்னாச்சு? – அதிர்ச்சியில் பாஜக!
- மதுபோதையில் மூதாட்டி வன்கொடுமை; இளைஞர் வெறிசெயல்! – புதுவை அருகே அதிர்ச்சி!
- நேரடி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்! – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
- நாடாளுமன்ற கூட்டத்தொடர்; நீட் விலக்கு மசோதாவை வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டம்!
பள்ளிகளில் மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்?
படிக்கும் அரசுப் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை.
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதலாக மெல்ல பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மாதத்தில் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்ததால் இந்த மாத இறுதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளை பள்ளிகள் தொடங்கியுள்ளன.
பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளில் நேரடி வகுப்புக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், பள்ளி திறந்தபின் மாணவர்கள் வராமல் இருந்தால் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே அதிக மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
