1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. how many votes percentage in starts candidates constituency

ஸ்டாலின்.. பழனிச்சாமி.. விஜய்.. சீமான்.. நட்சத்திர தொகுதிகளில் எவ்வளவு வாக்குப்பதிவு?..

seeman
2026ம் வருடத்துக்கான சட்டமன்ற தேர்தல் நேற்று தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என நான்குமுனை போட்டிகள் நிலவியது.

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தமிழக சட்டசபையில் மிகவும் அதிகமாக 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. வழக்கமாக மிகவும் குறைவான வாக்குப்பதிவு நடைபெறும் சென்னையில் கூட வாக்குப்பதிவு 80 சதவீதத்தை தாண்டியிருக்கிறது. இந்நிலையில் நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளில் எவ்வளவு வாக்குப்பதிவு என்கிற விபரத்தை பார்ப்போம்.

முதல்வர் மு.க ஸ்டாலின் போட்டுயிட்ட கொளத்தூர் தொகுதியில் 86.11 சதவீத வாக்குகள் பதிவானது. 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் 61.79 சதவீத வாக்குகள் பதிவானது.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 92.08 சதவீத வாக்குகள் பதிவானது. 2021 தேர்தலில் இதே தொகுதியில் 87.14 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

தவெக தலைவர் விஜய் போட்டுயிட்ட பெரம்பூர் தொகுதியில் 89.79 சதவீத வாக்குகள் பதிவானது. 2021 தேர்தலில் 63.55 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் 74.22 சதவீத வாக்குகள் பதிவானது. 2021ம் வருட தேர்தலில் 67.31 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட சாத்தூர் தொகுதியில் 85.74 சதவீத வாக்குகள் பதிவானது.

முன்னாள் முதல்வர், தற்போது திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட போடி தொகுதியில் 82.84 சதவீத வாக்குகள் பதிவானது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக் - திருவல்லிக்கேணி தொகுதியில் 84.34 சதவீ வாக்குகள் பதிவாகியிருந்தது. இதே தொகுதியில் கடந்த தேர்தலில் 58.74 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது.

பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்ட விருதாச்சலம் தொகுதியில் 86.20 சதவீத வாக்குகளும்,
தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட்ட மயிலாப்பூர் தொகுதி தொகுதியில் 74.81 சதவீத வாக்குகளும், சௌமியா அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி தொகுதியில் 89.44 சதவீத வாக்குகளும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 86.12 சதவீத வாக்குகளும், தமிழக பாஜக முன்னால் தலைவர் வேல்முருகன் போட்டியிட்ட அவிநாசி தொகுதியில் 90.57 சதவீத வாக்குகளும் பதிவானது.
அடுத்த கட்டுரையில்
மே.வங்கத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கே வாக்கு இல்லையா? உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு..!