1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. holiday-ends-people-return-to-chennai-heavy-traffic

தொடர் விடுமுறை முடிந்தது... சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

தொடர் விடுமுறை
விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த நிலையில், விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையை நோக்கி திரும்பி வருகின்றனர்.
 
குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமானோர் சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
 
இதன் காரணமாக தென் மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டை அடுத்த *சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன. 
 
விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால், செங்கல்பட்டு முதல் சென்னை நோக்கிச் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்றதுடன், பயண நேரமும் அதிகரித்தது.
 
தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு திரும்ப வேண்டிய சூழலில் மக்கள் அதிகளவில் சென்னை நோக்கி பயணிப்பதால், இன்று சென்னை நுழைவுப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
விஐடி பல்கலை.யில் பி.டெக். மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்