1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (13:33 IST)

தமிழகம் முழுவதும் சிலைகளை அகற்ற 3 மாதம் கெடு?

தமிழகம் முழுவதும் சிலைகளை அகற்ற 3 மாதம் கெடு?
தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு. 
 
ஆம், தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சாலைகள், பொது இடங்களில் உள்ள சிலைகளை பராமரிக்க தலைவர்கள் பூங்கா உருவாக்கவும் ஆணையிட்டுள்ளது.
 
மேலும், மக்களின் உரிமை பாதிக்காத வகையில் சிலை அமைக்க அனுமதி தருவது பற்றி புதிய விதிகளை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.