1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister sekar babu explain anout temples opening

கொரோனா முடியட்டும்.. 7 நாளும் கோவில் திறக்கப்படும்! – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா காரணமாக வார இறுதிகளில் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் விரைவில் முழுமையாக திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காராணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோவில்கள் திறக்கப்பட்டிருந்தாலும் வார இறுதிகளான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மூடப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக்களும் நடத்த தடை உள்ளது. இதனால் மக்கள் பலர் கோவில்களை முழுமையாக திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் சேகர் பாபு “ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் பேரில்தான் கோவில்கள் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா குறைந்தவுடன் வாரத்தின் 7 நாட்களிலும் கோவில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
Stay Tuned... டீசர் வெளியிட்டு ஹைப் கொடுக்கும் மோட்டோ!!