1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Karur collector announce prize for vaccination

தடுப்பூசி போடுங்க.. பரிசை அள்ளுங்க..! – கரூர் கலெக்டர் அறிவிப்பு!

Tamilnadu
கரூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை 5வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்‌ஷி குக்கர் உள்ளிட்டவை குலுக்கல் முறையில் வழங்கப்படும் என அம்மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
வலிமை, நல்ல ஆரோக்கியம் பிறக்கட்டும்! – பிரதமரின் நவராத்திரி வாழ்த்து!