புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (12:32 IST)

வெள்ளிக்கிழம கோவில் திறக்கலைனா.. திமுகவுக்கு சனிதான்! – பொன்னார் ஆவேசம்!

தமிழகத்தில் கோவில்கள் 3 நாட்கள் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காராணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோவில்கள் திறக்கப்பட்டிருந்தாலும் வார இறுதிகளான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மூடப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக்களும் நடத்த தடை உள்ளது. இந்நிலையில் கோவிலை முழுவதுமாக திறக்க வலியுறுத்தி மதுரையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் “இறைவனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை எனில் திமுக ஆட்சிக்கு சனி பிடிக்க போகிறது. திமுக போலி மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறது. வரும் வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.