புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (11:27 IST)

வகுப்பில் கூட இருக்கலாம்.. எப்ப வேணா அழைச்சிட்டு போலாம்! – பெற்றோருக்கு அன்பில் மகேஷ் தகவல்!

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பெற்றோர் உடன் இருக்கலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் நவம்பர் 1 ம் தேதி முதலாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் “நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் 1ம் வகுப்பு மாணவர்களுக்கு மாஸ்க் கூட அணிந்து கொள்ள தெரியாமல் இருக்கும். எனவே தடுப்பூசி போட்டுக் கொண்ட பெற்றோர்கள் பள்ளியில் 1ம் வகுப்பு மாணவர்களோடு இருக்கலாம். மாணவர்களுக்கு மாஸ்க் அணிய சிரமமாக இருந்தால்,  மூச்சுவிட சிரமப்பட்டால் அவர்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம்” என்று கூறியுள்ளார்.