புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (11:21 IST)

ரூ.3.98 கோடி - 15 வீரர்களுக்கு ஸ்டாலின் ஊக்கத்தொகை!

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 15 தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். 
 
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 15 தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஊக்கத்தொகை அளித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் 15 வீரர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
 
ஊக்கத்தொகை பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த வீரர்கள் முதல்வர் ஊக்கத்தொகை அளித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர். அப்போது பேசிய விஸ்வநாத ஆனந்த், செஸ் விளையாட்டில் நம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் உருவாகி வருகிறார்கள் என்று பெருமிதம் கொண்டார்.