1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. High rain in Tamil Nadu registered

தமிழகத்தில் கொட்டி தீர்த்த மழை - அதிகபட்ச மழை பதிவு!

சென்னை
நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் செய்யாறு, சூளகிரியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

 
சென்னையில் நேற்று நகர் முழுவதும் நல்ல மழை பெய்துள்ள நிலையில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் நல்ல மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி கொண்டுள்ளனர். 
 
இதனிடையே, நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் செய்யாறு, சூளகிரியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. உத்திரமேரூர், செய்யூர் தலா 9 செ.மீ., வந்தவாசி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
அதிதீவிர புயல்கள் உருவாவது 150% அதிகரிப்பு!