புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் ஆயத்தம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க இருப்பதை அடுத்து முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் சில முக்கிய மசோதாக்களை அமல்படுத்த ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் விலை ஏற்றம், புதிய வேளாண்மை சட்டம், ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
ஏற்கனவே திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனை குறித்து முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் எத்தனை அமளிதுமளி இருந்தாலும் திட்டமிட்ட மசோதாக்களை நிறைவேற்ற ஆளுங்கட்சி ஆயத்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை முதல் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெட்ரோல் விலை ஏற்றம் முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்றும் இந்த பிரச்சனையை கையில் எடுக்க கிட்டதட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.