1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 3 lakh covishield reaches Chennai

தமிழகத்திற்கு வந்த 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள்

3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி
தமிழகத்திற்கான மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் புனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன. 

 
உலகம் முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்ப கட்டத்தை எட்டியதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆங்காங்கே தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக மத்திய அரசு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  
 
அந்த வகையில் புனேவில் இருந்து 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தன. இதனையடுத்து, 3 லட்சம் தடுப்பூசி டோஸ்களை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
அதிதீவிர புயல்கள் உருவாவது 150% அதிகரிப்பு!