செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 ஜூலை 2021 (07:23 IST)

சென்னையில் இன்றும் நாளையும் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னையில் இன்றும் நாளையும் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
சென்னையில் நேற்று நகர் முழுவதும் நல்ல மழை பெய்துள்ள நிலையில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் நல்ல மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி கொண்டுள்ளனர் 
 
இந்த நிலையில் இன்றும் நாளையும் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் 21ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக கோவை, தேனி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது 
 
அதேபோல் நாளை கோவை, தேனி, நீலகிரி, சேலம்,, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான துவரை மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.