1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 ஜூலை 2021 (09:21 IST)

சென்னை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வேலை: ரூ.90 ஆயிரம் சம்பளம் என அறிவிப்பு!

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மருத்துவர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூபாய் 90 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் குழந்தைகள் நல மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் மருத்துவர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 22 ஆம் தேதிக்குள் மருத்துவப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என்றும் ஜூலை 27-ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவ பணியில் சேர விரும்புபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது