தொடர்புடைய செய்திகள்
- 11ம் வகுப்பு மறுமதிப்பீட்டு பட்டியல்: 236 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்..!
- இரவில் தனியாக செல்லும் பெண்கள்.. ரோந்து வாகனத்தில் அழைத்து செல்ல ஏற்பாடு..!
- போதை விருந்தில் நள்ளிரவில் விபச்சாரம்…25 இளம்பெண்கள் கைது
- குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற பெண்கள்: அதிர்ச்சி தகவல்..!
- 12ம் வகுப்பு மறு கூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு: 830 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம்
பெண்கள் உடை மாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்ட கேமிரா.. தனியார் ஜவுளிக்கடையில் விசாரணை..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் ஜவுளி கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோவில் அருகே உள்ள பிரபலமான ஜவுளிக்கடை ஒன்றில் இரண்டு பெண்கள் தாங்கள் வாங்கிய ஆடைகளை உடை மாற்றும் அறைக்கு சென்று அளவு பார்த்து உள்ளனர்.
அப்போது ஏசி அருகே ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டதை அவர்கள் கண்டுபிடித்து கடை நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதைக்கேட்ட அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே அந்த பெண் கூறிய இடத்தில் சென்று மறைத்து வைத்துள்ள செல்போனை எடுத்தனர்
அப்போது இந்த செல்போனை வைத்தவர் அந்த கடைக்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் தான் என்பதை கடை ஊழியர்கள் கண்டுபிடித்து அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். செல்போனை உடைமாற்றும் அறையில் மறைத்து வைத்த அந்த பெண்ணிடம் தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
