திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 ஜூன் 2023 (08:26 IST)

இரவில் தனியாக செல்லும் பெண்கள்.. ரோந்து வாகனத்தில் அழைத்து செல்ல ஏற்பாடு..!

இரவில் தனியாக செல்லும் பெண்களை ரோந்து வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
பணி காரணங்களுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவும் பெண்கள் தனியாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தால் 1091, 112 ஆகிய எண்களுக்கு அழைக்கலாம் என்று அவ்வாறு அழைத்தால் தனியாக பயணம் செய்யும் பெண்களை காவல் ரோந்து வாகனம் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. 
 
இரவில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்கள் இந்த புதிய பாதுகாப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்த சேவை அனைத்து நாள்களிலும் இருக்கும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
இதனால் இரவில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பாக எந்த வித அச்சமும் இன்றி பயணம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva