திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (13:40 IST)

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற பெண்கள்: அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலை மாவட்டம் புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
திருவண்ணாமலை மாவட்டம் புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கிற்கான மதில் சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கிய நிலையில் அந்த பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென இரண்டு பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை முயன்றனர். கிராம மக்கள் உடனடியாக கிணற்றில் குதித்து 2 பெண்களையும் மீட்டனர்
 
குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva