தொடர்புடைய செய்திகள்
- தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.1000 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!
- எண்ணெய் கழிவு தேங்கியதற்கு யார் காரணம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை
- வெள்ள நிவாரணம் ரொக்கமாக வழங்குவதற்கு எதிர்ப்பு: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு..!
- சென்னையில் அனைவருக்கும் நிவாரண தொகை.. 16ஆம் தேதி முதல் டோக்கன்: அமைச்சர் தங்கம் தென்னரசு
- சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்துகள் கூறிய தோனி!
வட மாவட்டங்களில் ஓய்ந்தது மழை.. தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..!
சென்னை உள்பட வட மாவட்டங்களில் கன மழை பெய்து ஓய்ந்து உள்ள நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு தென் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபி கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்யும் என்றும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva
