திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2023 (14:12 IST)

காதலியுடன் ஓடிப்போன மகனின் தாயை நிர்வாணமாக்கிய கொடூரம்: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்..!

காதலியுடன் இளைஞர் ஒருவர் ஓடிப்போன சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஓடிப்போன இளைஞரின் தாயை நிர்வாணமாக்கிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் பெலகாவி என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர்  அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதலர்கள் திடீரென  ஊரை விட்டு சென்றுவிட்டனர். 
 
இதனால் இளம் பெண்ணின் வீட்டினர் ஆத்திரம் அடைந்து இளைஞனின் தாயிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அதுமட்டுமின்றி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். 
 
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து ஏழு பேரை கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு உள்துறை அமைச்சர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva