திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2023 (07:50 IST)

வெள்ள நிவாரணம் ரொக்கமாக வழங்குவதற்கு எதிர்ப்பு: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு..!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு புயல் நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.  இந்த நிவாரண நிதி  ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். 
 
நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்கினால் அதிக முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் வங்கி கணக்கில் செலுத்தினால் பிரச்சனை இருக்காது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அரசு தரப்பில் இருந்து வங்கி கணக்கில் செலுத்தினால் மினிமம் பேலன்ஸ் மெயின்டன் செய்யாதவர்கள்  பயன் பெற முடியாது என்றும் வங்கி மினிமம் பேலன்ஸை எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva