கீதையையும், கிருஷ்ணரையும் இழிவாக பேசிய திக, திமுக, காங்கிரஸ் - ஹெச்.ராஜா டுவீட்!

raja
sinojkiyan| Last Modified ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (10:28 IST)
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. வரும் 21 ஆம் தேதி (நாளை ) விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதற்க்கான பிரச்சாரம் நேற்று மாலையும் நிறைவடைந்தன.
அதிமுக எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என தீவிரமாக முயற்சித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்கூட்டணி கட்சிகளான பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தும் வாக்குகள் சேகரித்தனர்.இந்த இடைத்தேர்தல் அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுவதால் திமுக, அதிமுக இடையே பலத்த போட்டி காணப்படுகிறது.

 
இந்நிலையில் இன்று காலையில் தமிழக பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  பகவத்கீதையையும், ஸ்ரீ கிருஷ்ணரையும் இழிவாக பேசிய திக, திமுக, காங்கிரஸ் கும்பலுக்கும், தனது சரக்கு மிடுக்குப் பேச்சால் அனைத்து சமுதாயத்தினரையும் இழிவு படுத்திய திருமாவளவனுடன் கூட்டணி கொண்டவர்கள் தமிழக அரசியல் களத்தில் இருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து. புரிந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

ஹெச். ராஜாவின் இந்தப் பதிவுக்கு திக, திமுக மற்றும் திருமாவளவன் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்படும் என சமூக வலைதளங்களி அவர்களின் ஆதராவாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
 


இதில் மேலும் படிக்கவும் :