அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்பிலும் இட ஒதுக்கீடா?
தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆணையம் முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது
ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான ஆணையம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம் நேற்று இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். தொழில் படிப்பு மாணவர் சேர்க்கை நிலை குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் சமீபத்தில் ஆணையம் அமைக்கப்பட்டது என்பது தெரிந்ததே
ஒரு மாதகாலம் தீர ஆராய்ந்த பின் ஆணையம் தரப்பில் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
எனவே மருத்துவ படிப்புகளுக்கு 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தது போல் தொழிற்கல்வி படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்