செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 20 ஜூலை 2021 (16:57 IST)

சென்னை பள்ளிகளில் லட்சம் மாணவர்கள்....

இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து, இந்தியா முழுதுவதும்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

இந்த வருடம் தொடக்கத்தில் பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ஒட்டி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை பரவலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக கற்பிக்கப்படு வருகிறது.

சமீபத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது,.

இதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மொத்தமுள்ள 281 மாநகராட்சிப் பள்ளிகளில் இதுவரை 1,07,757 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனதாகத் தகவல் வெளியாகிறது.