1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Govt school admission opened

ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை?

பள்ளி கல்வித்துறை
ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என வெளியான தகவல் பொய் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால்,  அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வழியாக அல்லாமல், தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்த அரசு முடிவு செய்துள்ளது, மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வரும் ஜூலை 15 ஆம்  தேதி வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என தகவல் வெளியானது. இதற்கு தற்போது பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது. தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு: அதிரடியில் இறங்கிய நாராயணசாமி!