1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (16:20 IST)

எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு: அதிரடியில் இறங்கிய நாராயணசாமி!

எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். 
 
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
இந்நிலையில், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இம்மாதிரியான செயலில் ஈடுப்பட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.